TNPSC Thervupettagam

குவார்ட்ஸ் படிகக் கல்லினால் செய்யப்பட்ட எடைக்கல் - கீழடி

August 11 , 2023 344 days 221 0
  • கீழடியில் மேற்கொள்ளப்பட்ட 9 ஆம் கட்ட அகழாய்வில் குவார்ட்ஸ் படிகக் கல்லினால் செய்யப்பட்ட எடைக்கல் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
  • 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு, கீழடியில் ஒரு குவார்ட்ஸ் படிகக் கல் கண்டுபிடிக்கப் படுவது இதுவே முதல் முறையாகும்.
  • இது இயற்கையில் ஒளி புகும் (பளிங்குக் கல்) வகையிலானதாகும்.
  • இது கறுப்பு-சிவப்பு நிற மட்பாண்டங்கள் மற்றும் செம்பூச்சு மட்பாண்டங்கள் ஆகியவையும் இந்த அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டது.
  • சுடுமண் பாண்டத்தினால் ஆன பாம்பு உருவத்தின் ஒரு எஞ்சியப் பகுதியும் இந்த அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளது.
  • மதுரைக்கு அருகில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள இது சங்கக் காலத்தைச் சேர்ந்த தலத்தின் காலத்தை ஒத்துள்ளது.
  • தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டத் தொல்லியல் அகழ்வாராய்ச்சிகள் பின்வரும் மிக ஆச்சரியமிக்கத் தகவல்களை வழங்கியுள்ளன.
  • மதுரைக்கு அருகிலுள்ள கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் சங்க காலத்தின் காலகட்டத்தினை கி.மு. 300 முதல் கி.மு. 600 ஆம் காலகட்டத்தினைச் சேர்ந்ததாக எடுத்துரைக்கின்றன.
  • சிவகாலையில் உள்ள முதுமக்கள் தாழியில் கண்டெடுக்கப்பட்ட நெற்கதிர்கள் 3,200 ஆண்டுகள் பழமையானது என கண்டறியப் பட்டுள்ளது.
  • 4,200 ஆண்டுகளுக்கு முன்னதாக கி.மு. 2172 ஆம் ஆண்டில் தமிழர்கள் இரும்புத் தொழில்நுட்பத்தைப் பற்றி அறிந்திருந்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்