TNPSC Thervupettagam
November 11 , 2023 252 days 336 0
  • ‘குஷா திட்டம்’ எனப்படும் இந்தியாவின் சொந்த நீண்ட தூர வரம்பு உடைய வான் பாதுகாப்பு அமைப்பினைப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கி வருகிறது.
  • இது நீண்ட தூரத்தில் உள்ள சீர்வேக ஏவுகணைகள், ரேடாருக்குப் புலப்படாத போர் விமானங்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் உள்ளிட்ட எதிரி நாட்டு எறிகணைகள் மற்றும் கவச அமைப்புகளை  கண்டறிந்து அழிக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.
  • உயர் இலட்சியமிக்க இத்திட்டம் ஆனது, இஸ்ரேலின் இரும்புக் கவச அமைப்பை விட சிறப்பாகச் செயல்படுவது மட்டுமல்லாமல், ரஷ்யாவின் S-400 அமைப்பு மற்றும் அமெரிக்காவின் ‘பேட்ரியாட்’ அமைப்பு ஆகியவற்றின் செயல்திறனுக்கும் இணையான திறன் கொண்டதாக இருக்கும் என நம்பப்படுகிறது.
  • உள்நாட்டு நீண்ட தூர வரம்புடைய நிலம் விட்டு வான் பாயும் பாதுகாப்பு அமைப்பு (LR-SAM) ஆனது, இடைமறிப்பு எறிகணைகளுடன் கூடிய நீண்ட தூர வரம்புடைய கண்காணிப்பு மற்றும்ஏவுகணை கட்டுப்பாட்டு ரேடார்களை உள்ளடக்கியது.
  • இந்த ஏவுகணைகள் 150 கி.மீ., 200 கி.மீ., மற்றும் 350 கி.மீ என்ற தூரத்தில் உள்ள எதிரி நாட்டு இலக்குகளை கண்டறிந்து தாக்கும்.
  • இது உத்திசார் மற்றும் போர்த்திறம் சார்ந்தப் பாதுகாப்பினை வழங்குவதில் பயன் உள்ளதாக இருக்கும்.
  • இரண்டு ஏவுகணைகள் ஒன்றன் பின் ஒன்றாக ஏவப்படும் போது, இந்த அமைப்பு குறைந்தபட்சம் 80% மற்றும் 90%க்கும் அதிகமான அழிப்பு வாய்ப்பைக் கொண்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்