மாநிலம் முழுவதும் 17 லட்சம் பள்ளி பெண் குழந்தைகளுக்கு சுகாதார பேணுகைக்கான இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்குவதற்கு ஒடிஸா மாநில அரசு “குஷி“ (Khushi) எனும் திட்டத்தை தொடங்கியுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பெண் குழந்தைகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்கும் இத்திட்டத்தை மாநில சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் செயல்படுத்த உள்ளது.
இதற்கு முன் மாநில அரசானது பெண்களின் மேம்பாட்டிற்கென பிரத்யேகமாக பல திட்டங்களை உருவாக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. அவற்றுள் சில:
மிஷன் சக்தி - பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக
MAMATA - மகளிருக்கான பேறுகால பயனளிப்புத் திட்டம் (Maternity benefit Scheme).