TNPSC Thervupettagam

கூகுள் கடவுக் குறியீட்டு விசைகள்

May 18 , 2023 556 days 306 0
  • கூகுள் தனது கணக்குகளில் உள்நுழைவதற்கான கடவுச் சொல்லுக்கான ஒரு மாற்றாக கடவுக் குறியீட்டு விசைகளை வெளியிடத் தொடங்கியுள்ளது.
  • பல்வேறு செயலிகள் மற்றும் இணையதளங்களில் உள்நுழைவதற்கான எளிய மற்றும் பாதுகாப்பான வழியாகக் கடவுக் குறியீட்டு விசைகள் கருதப்படுவதோடு, மேலும் இது பயனரின் உயிரியளவுக் கூறுகளைச் சார்ந்துள்ளது.
  • வெவ்வேறு இணைய தளங்களுக்கான நீண்ட கடவுச் சொற்களை இனிமேல் நினைவில் வைத்திருக்க வேண்டிய ஒரு அவசியமில்லை என்பதால், கடவுக் குறியீட்டு விசைகள் பயனர்களுக்கு இடையூறு இல்லாத உள்நுழைவு அனுபவத்தை வழங்குகின்றன.
  • கடவுச்சொற்களைப் போலன்றி, கடவுக் குறியீட்டு விசைகள் தகவல் திருடும் நிரல்கள் போன்ற இயங்கலைத் தாக்குதல்களுக்கு எதிராக அதிக எதிர்ப்புத் திறன் கொண்டவை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்