TNPSC Thervupettagam
February 28 , 2018 2463 days 839 0
  • கூகுள் தனது கூகுள் டெஸ்-ஐ பாரத ஸ்டேட் வங்கியுடன் (State Bank of India - SBI) ஒருங்கிணைத்துள்ளது. இதன் மூலம் SBI-ன் வாடிக்கையாளர்கள் கைபேசி கட்டண செயலியின் (Mobile Payment App) வழியாக அவர்களின் வங்கிக்கணக்கைக் கொண்டு பரிவர்த்தனை செய்து கொள்ளமுடியும்.
  • SBI ஆனது கூகுள் டெஸ் உடன் இணையும் முதல் பொதுத்துறை வங்கியாகும்.
  • எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் பரிவர்த்தனையை மேற்கொள்வதற்காக இந்த செயலி மூலம் ஒரு தனிப்பட்ட UPI ID யை (Unified Payment Interface - UPI) உருவாக்கிக் கொள்ளலாம்.
  • தற்போது வரையில் கூகுள் நிறுவனமானது, கூகுள் டெஸ் செயலி உபயோகிப்பாளர்களை அவர்களுக்கான வங்கி ஒருங்கிணைக்கப்பட்ட கட்டண இடைமுகத்தை (Unified payment Interface Handle) உருவாக்குவதற்காக 4 வங்கிகளுடன் கூட்டிணைப்பை (Partnership) ஏற்படுத்தியுள்ளது.
  • வாடிக்கையாளர்கள் நேரடியாக இந்த செயலியை பயன்படுத்தி அவர்களது வங்கி கணக்கிலிருந்து பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம்.
  • எஸ்பிஐயைத் தவிர்த்து இதில் இணைந்துள்ள மற்ற மூன்று வங்கிகள்
    • எச்டிஎப்சி வங்கி
    • ஆக்ஸிஸ் வங்கி
    • ஐசிஐசிஐ வங்கி
  • அரசு, பணப்பரிவர்த்தனையைக் குறைக்கவும் (Use of Cash) UPI தளத்தின் பயன்பாட்டை அதிகரித்து டிஜிட்டல் (Digital Payment) பரிவர்த்தனையை அதிகரிக்கவும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்