TNPSC Thervupettagam

கூகுள் நிறுவனம் மீதான நம்பிக்கையற்ற தன்மை மீதான தீர்ப்பு

August 21 , 2024 94 days 117 0
  • திறன் பேசி இணைய உலாவிகளில் அதன் தேடுபொறியை இயல்புநிலை விருப்பத் தேர்வாக மாற்றுவதற்கு கூகுள் நிறுவனம் பணம் செலுத்திய செயல் அமெரிக்காவின் நம்பிக்கைக்கு எதிரான தன்மை என்ற சட்டத்தை மீறுகிறது.
  • இந்தச் சலுகைக்காக கூகுள் நிறுவனம் பணம் செலுத்துகிறது என்பதோடு மேலும் 2021 ஆம் ஆண்டில் இதற்காக 26 பில்லியன் டாலருக்கும் அதிகமாக அது செலவிட்டுள்ளது.
  • பொதுத் தேடல் சேவைகள் மற்றும் பொதுவான தேடல் உரை சார் விளம்பரங்கள் ஆகியவற்றுக்கான சந்தைகளில் கூகுள் ஒரு ஏகபோக அதிகாரத்தைக் கொண்டுள்ளது என்று அந்த நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
  • சோதனைச் சான்றாகச் செயல்படக்கூடிய அதன் ஊழியர்களின் குறுஞ்செய்திகளைப் பெருமளவு பாதுகாக்கத் தவறியதற்காக கூகுள் நிறுவனத்தையும் அது சாடியுள்ளது.
  • இந்தியாவிலும், கூகுள் நிறுவனம் போட்டித்தன்மை எதிர்ப்பு நடைமுறைகளின் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்