தேசியப் பங்குச் சந்தை முகமையானது, அதானி நிறுவனங்கள், அதானி துறைமுகம் மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் ஆகியவற்றைத் தனது கூடுதல் கண்காணிப்புச் செயல் முறையின் கீழ் வைத்துள்ளது.
இதன் பொருள் அவற்றின் பங்குகளில் வர்த்தகம் செய்வதற்கு 100% தொகை தேவை.
இது ஊக வணிகங்கள் மற்றும் குறைந்த நேரத்தில் பங்கு விற்பனை ஆகியவற்றினைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சந்தையில் உள்ள ஏற்ற இறக்கம் மற்றும் பங்கு விலையில் ஏற்படும் அசாதாரண மாற்றங்களிலிருந்து முதலீட்டாளர்களைப் பாதுகாக்கும் ஒரு நோக்கத்துடன் 2018 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் தேதியன்று இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டது.