பிறப்பு, முதுமை மற்றும் இறப்பு என்ற வழக்கமான சுழற்சியை முறிக்கும் ஒரு கடல் வாழ் முதுகெலும்பில்லாத புதிய உயிரினத்தை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அவை டெனோபோறே நெமியோப்சிஸ் லெய்டியி என்றும் அழைக்கப்படுகின்றன, என்பதோடு இவை வயது முதிர்வை மீறி, அவற்றின் இளம் வடிவங்களுக்குத் திரும்பும் திறன் கொண்டுள்ளன.
வயது முதிர்ந்த கூடு வடிவ இழுது மீன்கள் (ஜெல்லி மீன்) தீவிர மன அழுத்தத்திற்கு உள்ளாகும் போது அவை லார்வா நிலையை அடைகிறது.
கூடு வடிவ இழுது மீன்களின் தோற்றம் ஆனது 700 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே இருக்கலாம் என்று கணக்கிடப்படச் செய்வதால் முதல் முறையாக புவியில் தோன்றிய விலங்குகளில் ஒன்றாக இது இருக்கலாம் என்று கருதப்படுகிறது.