TNPSC Thervupettagam

கூட்டு ஒத்துழைப்பு குழு

December 7 , 2017 2544 days 857 0
  • ஐக்கிய அரபு எமீரகமானது சவூதி அரேபியாவுடன் இணைந்து அரபு ஒத்துழைப்பு கவுன்சிலிலிருந்து [GCC – Gulf Co-operation Council] தனியான ஓர் “கூட்டு ஒத்துழைப்பு குழுவை” [Joint Co-operation Committee] ஏற்படுத்தி உள்ளது.
  • அரபு  ஒத்துழைப்பு கவுன்சிலுக்கு   கத்தாருடன் இராஜ்ஜிய ரீதியிலான (Diplomatic) சச்சரவு நீடிக்கும் இவ்வேளையில் இது 6 உறுப்பினர்களுடைய GCC–ன் முக்கியத்துவத்தை பலவீனப்படுத்தும் நகர்வாக கருதப்படுகின்றது.
  • இராணுவம், அரசியல், பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் கலாச்சாரம் ஆகிய களங்களின் அனைத்து பிரிவுகளிலும், இரு நாடுகளின் பிற நலன்களிலும் ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்காக இப்புதிய குழு உருவாக்கப்பட்டுள்ளது.
  • அபுதாபியின் முடிசூட்டு இளவரசரான ஷேக் முகமது பின் ஜயேத் அல் நஹ்யான் இக்குழுவிற்குத் தலைமைத் தாங்குவார்.
அரபு ஒத்துழைப்பு கவுன்சில் – GCC
  • GCC ஆனது ஈராக் தவிர்த்து பெர்சிய வளைகுடாவில் உள்ள அனைத்து அரபு நாடுகளுக்கிடையேயான பிராந்திய அரசியல் மற்றும் பொருளாதார சங்கம் ஆகும்.
  • பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமீரகம் ஆகியவை இதன் உறுப்பினர்களாகும்.
  • ஆறு நாடுகளிடையே பொருளாதாரம், பாதுகாப்பு, கலாச்சாரம் மற்றும் சமூக ஒத்துழைப்பு ஆகியவற்றை மேம்படுத்த இது அமைக்கப்பட்டது.
  • மேலும் ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய விவகாரங்களைப் பற்றி விவாதிக்க இக்கவுன்சிலில் வருடாந்திர மாநாடுகளும் நடத்தப்படுகின்றன.
  • GCC ல் உள்ள அனைத்து நாடுகளும் முடியாட்சி (Monarchy) உடைய நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
  • அவற்றுள்,
    • குவைத், கத்தார், பஹ்ரைன் ஆகிய மூன்று நாடுகள் அரசியலமைப்பு முடியாட்சி  உடைய [Constitutional Monarchy] நாடுகளாகும்.
    • ஓமன் மற்றும் சவூதி அரேபியா ஆகிய  இரண்டும் முழுமையான முடியாட்சி [Absolute Monarch]  உடைய நாடுகளாகும்.
    • ஐக்கிய அரபு எமிரகமானது [UAE – United Arab Emirates] கூட்டாட்சி முடியுடைய (Federal Monarchy) ஓர் நாடாகும். [UAE ஆனது ஏழு மாநிலங்களை உடையது. இவை ஒவ்வொன்றும் தனக்கென ஓர்  அமிர் உடைய முழுமையான முடியாட்சி கொண்ட மாநிலங்களாகும்]

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்