ஆந்திரப் பிரதேசத்தின் கொல்லேறு ஏரியில் அமைந்துள்ள அடபகா பறவைகள் சரணாலயத்தில் (Atapaka Bird Sanctuary) முதல் முறையாக கூழைக்கடா (Pelican) பறவைகள் திருவிழா - 2018 நடத்தப்பட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தின் சுற்றுலா ஆணையம் கிருஷ்ணா மாவட்ட நிர்வாகத்துடன் இனைந்து இத்திருவிழாவை நடத்தியுள்ளது.
அண்மையில் அடாபாகா பறவைகள் சரணாலயமானது உலகின் மிகப்பெரிய பெலிகான்ரிகளில் (Pelicanry) ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
சாம்பல் நிற கூழைக்கடா பறவைகள் வளையமைத்து, இனப்பெருக்கம் செய்யும் இடமே பெலகான்ரி (Pelicanry) எனப்படும்.
Spot Billed Pelican என்றும் அழைக்கப்படுகின்ற சாம்பல் கூழைக்கடாக்களானது 1972-ஆம் ஆண்டின் இந்திய வன உயிர் பாதுகாப்புச் சட்டத்தின் (Wildlife Protection Act 1972) அட்டவணை I-ல் பட்டியலிடப்பட்டுள்ளது.
மேலும் பன்னாட்டு இயற்கை பாதுகாப்புச் சங்கத்தின் (International Union for Conservation of Nature) சிவப்புத் தரவு புத்தகத்தின் (Red Data Book) கீழ் இப்பறவையானது “அச்சுறு நிலை அண்மித்த இனமாக“ (Near Threatened) வகைப்படுத்தப்பட்டுள்ளது.
கொல்லேறு ஏரி
கொல்லேறு ஏரியானது நாட்டின் மிகப்பெரிய நன்னீர் ஏரிகளுள் ஒன்றாகும். இது கிருஷ்ணா மற்றும் கோதாவரி டெல்டாவிற்கு இடையே அமைந்துள்ளது.
1972ன் இந்திய வன உயிர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இது வன உயிர் சரணாலயமாக 1999 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது நவம்பர் 2002ல் ராம்சார் உடன்படிக்கையின்படி சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலமாக (Wetlands of International Importance) பட்டியலிடப்பட்டுள்ளது.