TNPSC Thervupettagam

கென்-பெட்வா நதி இணைப்பு திட்டம் 2024

December 27 , 2024 64 days 137 0
  • இந்தியாவின் முதன்முதல் நதி நீர் இணைப்புத் திட்டமான கென்-பெட்வா நதிகளை இணைக்கும் திட்டத்திற்கு மத்தியப் பிரதேசத்தின் கஜுராஹோவில் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
  • KBLP திட்டம் ஆனது யமுனை நதியின் இரு துணை நதிகளான கென் நதியில் இருந்து பெட்வா நதிக்கு நீரை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகளில் பரவி காணப் படும் பந்தேல்கண்ட் பகுதியின் நீர்ப் பிரச்சினைகளைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டது.
  • கென்-பெட்வா நதிகளை இணைக்கும் இந்தத் திட்டம் ஆனது, மத்தியப் பிரதேசத்தின் குறைந்தது 10 மாவட்டங்கள் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன நீர்த் தேவைகளை நிவர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • இந்தத் திட்டம் ஆனது 100 மெகாவாட்டிற்கு மேல் நீர் மின்னாற்றல் மற்றும் 27 மெகா வாட் திறன் கொண்ட சூரிய மின்னாற்றலை உற்பத்தி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மத்தியப் பிரதேசத்தின் ஓம்காரேஷ்வரில் அமைக்கப்பட்டுள்ள அம்மாநிலத்தின் முதல் சூரிய சக்தி ஆலையான மிதக்கும் சூரிய மின்னாற்றல் உற்பத்தி ஆலையினையும் அவர் தொடங்கி வைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்