கெப்ளர் - 47 அமைப்பில் ஒரு புதிய கோளினை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதற்கு கெப்ளர் – 47d எனப் பெயரிடப்பட்டுள்ளது.
நாசாவின் கெப்ளர் விண்வெளித் தொலை நோக்கியின் தரவுகளைப் பயன்படுத்தி ஏற்கனவே அறியப்பட்ட கெப்ளர் – 47b மற்றும் 47c ஆகிய இரண்டு கோள்களுக்கு நடுவே சுற்றி வரும் நெப்டியூன் முதல் சனி அளவுடைய இந்தப் புதிய கோளினை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
புதிய ஆய்வின்படி கெப்ளர் 47d ஆனது பூமியைவிட ஏழு மடங்கு பெரியது. மேலும் இரண்டு சூரியன்களைச் சுற்றிவரும் அமைப்பான கெப்ளர் – 47 அமைப்பின் மூன்று கோள்களிலும் இதுவே மிகப் பெரியதாகும்.
கெப்ளர் – 47 அமைப்பு
கெப்ளர் - 47 என்ற அமைப்பானது சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகள் பழமையானது. மேலும் இது சிக்னஸ் விண்மீன்த் திரளின் திசையில் 3,340 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.
கெப்ளர் – 47d கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் தற்போது இரண்டு சூரியனைச் சுற்றி வருகின்ற கெப்ளர் – 47 அமைப்பில் 3 கோள்கள் உள்ளன.
கெப்ளர் – 47 அமைப்பானது இரட்டை நட்சத்திர அமைப்பைக் கொண்டதாகும். மேலும் அறியப்பட்ட வகையில் இது ஒன்றே பல கோள்களைக் கொண்ட சுற்று இருமை அமைப்பாகும்.
இரண்டு நட்சத்திரங்களைச் சுற்றி வரும் கோள்களைச் சுற்று இருமைக் கோள்கள் எனலாம்.