TNPSC Thervupettagam

கெலேபு - விழிப்புணர்வு மிக்க நகரம்

December 1 , 2024 22 days 85 0
  • பூடான் நாட்டின் கெலேபு என்ற நகரில் உருவாக்கப்பட்டு வரும் 2,500 சதுர கிலோமீட்டர் பரப்பிலான "சுழிய அளவு கார்பன் உமிழ்வு" வெளியிடும் ஒரு நகரத்திற்கு இந்தியா ஆதரவளித்து வருகிறது.
  • இது ஒரு சிறப்பு நிர்வாகப் பகுதி (SAR) ஆகும்.
  • இது அதன் சொந்த அரசாங்கத்தைக் கொண்டிருக்கும் என்பதோடு மேலும், அதன் சொந்தச் சட்டத்தை உருவாக்கச் செய்வதற்கான சுதந்திரம் மற்றும் சுதந்திரமான நீதித்துறை ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
  • இது ஒரு தேசியப் பூங்கா மற்றும் ஒரு வனவிலங்குச் சரணாலயம் என இரண்டு பாதுகாக்கப் பட்ட பகுதிகளைக் கொண்டிருக்கும்.
  • ‘விழிப்புணர்வு மிக்க நகரம்' என்ற இந்தத் திட்டம் ஆனது பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சக் அவர்களால் கருத்தாக்கம் செய்யப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்