TNPSC Thervupettagam
June 17 , 2019 1860 days 763 0
  • சர்வதேச அளவில் கெல்ப் காடுகள் (Kelp Forests) போன்ற கடல்சார் வாழ்விடங்களை காலநிலை மாற்ற நிகழ்வுகள் மாற்றியமைக்கின்றன.
  • கெல்ப் என்பது உலகம் முழுவதும் கடற்கரை முகத்துவாரத்திற்கு அருகிலுள்ள ஆழமற்ற நீர்ப் பரப்பு, ஊட்டச் சத்து மிக்க உப்பு நீர் ஆகியவற்றில் வளரும் மிகப்பெரிய பழுப்பு நிறக் கடற்பாசி வகையாகும்.
  • 350ற்கும் மேற்பட்ட வெவ்வேறான இனங்கள் மற்றும் 1,00,000 வரையிலான சிறிய முதுகெலும்பற்ற இனங்கள் ஆகியவை ஒரே கெல்ப் தாவரத்தில் வாழும் திறன் கொண்டவை.
  • அதிக அளவிலான மீன்கள், பறவைகள் மற்றும் பாலூட்டிகள் ஆகியவை நீருக்கு அடியில் உள்ள கெல்ப் காடுகளைச் சார்ந்துள்ளன.
  • இந்தக் காடுகள் உள்ள இடங்கள் : மேற்கு ஆஸ்திரேலியா, கிழக்குக் கனடா, தெற்கு ஐரோப்பா, வடக்கு கலிபோர்னியா மற்றும் கிழக்கு அமெரிக்கா.
  • இது மிகக் கடுமையான ஆர்க்டிக் சுற்றுச் சூழலிலும் வளர்ந்து, உயிர்வாழும் திறன் கொண்டு விளங்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்