TNPSC Thervupettagam

கெளதம் பம்பாவாலே – சீனாவுக்கான இந்திய தூதர்

October 15 , 2017 2469 days 872 0
  • சீன மக்கள் குடியரசுக்கான இந்திய தூதராக கெளதம் பம்பாவாலே நியமிக்கப்பட்டுள்ளார்.
  • 1984 ஆம் ஆண்டு பணிப்பிரிவைச் சேர்ந்த இந்திய அயல்நாட்டுப் பணி அதிகாரியான கெளதம் பம்பாவாலே, தற்போது பாகிஸ்தானுக்கான இந்தியாவின் உயர் ஆணையராக பணிபுரிந்து வருகிறார்.
  • இதற்குமுன் பம்பாவாலே பூட்டான் நாட்டிற்கான இந்திய தூதராக பதவி வகித்தார்.
  • பம்பாவாலேவின் புதிய பணி நியமனத்தைத் தொடர்ந்து அவர் வகித்து வரும் பாகிஸ்தானுக்கான இந்தியாவின் உயர் ஆணையர் பதவி காலியாகிறது.
  • இந்த பதவிக்கு தற்போதைய போலந்து நாட்டின் இந்தியத் தூதர் அஜய் பிசாரியா நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்