TNPSC Thervupettagam

கேட்டலோனியா இயக்கம்

October 4 , 2017 2463 days 752 0
  • சமீபத்தில் கேட்டலோனியாவின் சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது.
  • வாக்கெடுப்பின் ஆரம்பகட்ட முடிவுகள் 90 சதவீதம் கேட்டலோனியாவின் சுதந்திரத்திற்கு ஆதரவாக இருப்பதை தெரிவித்துள்ளது.. இதற்கு ஸ்பெயின் அரசாங்கத்தால் கடுமையாக எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த வாக்கெடுப்பிற்கு ஸ்பெயினின் அரசியலமைப்பு நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் இதற்கென சட்ட அங்கீகாரம் எதுவும் கிடையாது.
  • மேலும் இந்த வாக்கெடுப்பு சட்ட விரோதமான வாக்கெடுப்பு என்று ஸ்பெயினின் மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேட்டலோனியாவின் பின்னணி
  • கேட்டலோனியா என்பது வரலாற்று நீதியாக ஸ்பெயினின் வடகிழக்கில் ஐபீரியன் தீபகற்பத்தில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த தன்னாட்சி பெற்ற பகுதியாகும். இதன் தலைநகரம் பார்சிலோனா ஆகும்.
  • இதற்கென்று புகழ்பெற்ற வரலாறு, கலாச்சாரம், மொழி, சட்டங்கள் மற்றும் பழக்க வழக்கங்கள் இருந்தபோதிலும் இதன் கலாச்சார தனியம்சம் ஒருபோதும் அங்கீகரிக்கப்படவில்லை.
  • முன்சென்ற அனைத்து அரசுகளும் கலாச்சார ரீதியாக ஸ்பானிய அரசுடன் கேட்டலோனியாவை ஒருங்கிணைப்பதற்காக அதன்மேல் ஸ்பானிய மொழியையும் சட்டங்களையும் திணித்தனர்.
  • இதுவே கேட்டலோனியாவின் பிரிவினைக்கான கோரிக்கைக்கு முதன்மை காரணமாகும். மேலும் இப்பிரிவினை கோரிக்கை ஜெனரல் பிரான்சிஸ்கோ பிராங்கோ என்ற சர்வாதிகாரியின் கீழ்      1940-களில் நசுக்கப்பட்டது.
  • சுதந்திர கேட்டலோனியாவின் ஆதரவாளர்கள் கேட்டலோனியா ஸ்பெயினின் வளமான பகுதிகளுள் ஒன்று எனவும், மாட்ரிட்டிலுள்ள மத்திய அரசிடமிருந்து பெறும் உதவியை விட கேட்டலோனியா அதிகம் பங்களிக்கிறது (20 % பொருளாதார பங்களிப்பு) எனவும் தெரிவித்துள்ளனர்.
  • பார்சிலோனாவின் வருமானம் மற்றும் சொத்துக்கள் மற்ற ஏழை மாகாணங்களுக்கு பிரித்துக் கொடுக்கப் படுவதாக பிரிவினைவாதிகள் உணர்வதால் பிரிவினை கோரி வருகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்