TNPSC Thervupettagam

கேண்டிடா அவ்ரிஸ்

March 27 , 2021 1214 days 540 0
  • ஆய்வாளர்கள் அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளின் தொலைதூரக் கடற்கரைப் பகுதிகளில் கேண்டிடா அவ்ரிஸ் எனும் பூஞ்சைத் தொற்றினைக் கண்டறிந்துள்ளனர்.
  • இது அடுத்தப் பெருந்தொற்றினை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது என கூறியுள்ளனர்.
  • பல மருந்துகளுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியைக் கொண்ட பூஞ்சையான கேண்டிடா அவ்ரிஸ் முக்கிய பூஞ்சை எதிர்ப்பு சிகிச்சைகளுக்கும் எதிரான சக்தியைப் பெற்றுள்ளதால் இது ஒரு “சூப்பர்பக்” ('superbug') ஆக மாறியுள்ளது.
  • கேண்டிடா அவ்ரிஸ் காயங்களின் மூலம் உடலினுள் நுழையும் முன் தோல்களில் உயிர் வாழும்.
  • இரத்த ஓட்டத்தில் கலந்தவுடன் இது தீவிரமான நோயினை ஏற்படுத்தும்.
  • மேலும் உலகளவில் வருடத்திற்கு 11 மில்லியன் மக்களின் உயிரைப் பலி வாங்கும் செப்சிஸ் எனப்படும் இரத்தத் தொற்றினையும் அது ஏற்படுத்தும்.
  • கேண்டிடா அவ்ரிஸ் மருத்துவமனைகளில் ஒரு நோயாளியிடமிருந்து இன்னொரு நபருக்குப் பரவுகிறது.
  • இது குறிப்பாக பலவீனமான நோயெதிர்ப்புச் சக்தியுள்ள நபர்களை தாக்குகிறது.
  • இது மாசுபட்ட சுற்றுச்சூழல் பரப்புகள் (அ) உபகரணங்களைத் தொடுவதால் பரவுகிறது.
  • பொதுவான ஆய்வக முறைகளைக் கொண்டு இதனைக் கண்டறிவது என்பது மிகவும் கடினமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்