TNPSC Thervupettagam
July 21 , 2021 1101 days 468 0
  • 74வது கேன்ஸ் திரைப்பட விருது விழாவில் பாயல் கபாடியாவின் (Payal Kapadia) “A Night of Knowing Nothing” எனும் திரைப்படத்திற்கு சிறந்த ஆவணப் படத்திற்கான Oeil d’or (கோல்டன் ஐ/ தங்கக் கண்) விருதானது வழங்கப்பட்டுள்ளது.
  • இப்படத்தின் இயக்குநர் பாயல் மும்பையைச் சேர்ந்தவர் ஆவார்.
  • ஜுலியா டுகோர்னாவ் (Julia Ducournau) ‘Titane’ எனும் தனது திரைப்படத்திற்காக கேன்ஸின் உயரிய விருதான பால்மே டி ஓர் (Palme d’Or) விருதினைப் பெற்றார்.
  • இதன் மூலம் இந்த விருதை வென்ற இரண்டாவது பெண்மணி எனும் பெருமையை இவர் பெற்றார்.
  • இந்த விருதைப் பெற்ற முதல் விருதாளர் 1993 ஆம் ஆண்டில் “The Piano” படத்திற்காக விருது பெற்ற ஜேன் கேம்பியன் என்பவராவார்.
  • சிறந்த இயக்குநர் விருதானது பாப்-ஒபெரா வகை இசையினை சார்ந்த ‘Annette’ என்ற திரைப்படத்திற்காக லியோஸ் காரக்ஸ் (Leos Carax) என்பவருக்கு வழங்கப்பட்டது.
  • கேன்ஸ் திரைப்பட விருது விழாவானது பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் என்னுமிடத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்ற விருது வழங்கும் ஒரு விழாவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்