74வது கேன்ஸ் திரைப்பட விருது விழாவில் பாயல் கபாடியாவின் (Payal Kapadia) “A Night of Knowing Nothing” எனும் திரைப்படத்திற்கு சிறந்த ஆவணப் படத்திற்கான Oeil d’or (கோல்டன் ஐ/ தங்கக் கண்) விருதானது வழங்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் இயக்குநர் பாயல் மும்பையைச் சேர்ந்தவர் ஆவார்.
ஜுலியா டுகோர்னாவ் (Julia Ducournau) ‘Titane’ எனும் தனது திரைப்படத்திற்காக கேன்ஸின் உயரிய விருதான பால்மே டி ஓர் (Palme d’Or) விருதினைப் பெற்றார்.
இதன் மூலம் இந்த விருதை வென்ற இரண்டாவது பெண்மணி எனும் பெருமையை இவர் பெற்றார்.
இந்த விருதைப் பெற்ற முதல் விருதாளர் 1993 ஆம் ஆண்டில் “The Piano” படத்திற்காக விருது பெற்ற ஜேன் கேம்பியன் என்பவராவார்.
சிறந்த இயக்குநர் விருதானது பாப்-ஒபெரா வகை இசையினை சார்ந்த ‘Annette’ என்ற திரைப்படத்திற்காக லியோஸ் காரக்ஸ் (Leos Carax) என்பவருக்கு வழங்கப்பட்டது.
கேன்ஸ் திரைப்பட விருது விழாவானது பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் என்னுமிடத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்ற விருது வழங்கும் ஒரு விழாவாகும்.