TNPSC Thervupettagam

கேரளக் கல்வி நிறுவனங்களின் தரவரிசைக் கட்டமைப்பு

May 11 , 2023 436 days 206 0
  • கேரள மாநில அரசானது, கேரளக் கல்வி நிறுவனங்களின் தரவரிசைக் கட்டமைப்பினை (KIRF) அதிகாரப் பூர்மாக அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது தேசியக் கல்வி நிறுவனத் தரவரிசைக் கட்டமைப்பின் (NIRF) மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • இது மாநிலத்தில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களின் தரத்தினை மதிப்பிடுவதை ஒரு முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • கேரள மாநில உயர்கல்விச் சபையானது (KSHEC) இந்த வருடாந்திரத் தரவரிசை நடவடிக்கையினைச் செயல்படுத்துவதற்கான ஒரு முகமையாக விளங்கும்.
  • ஒரு மாநிலம் சார்ந்தத் தரவரிசைக் கட்டமைப்பினை நிறுவிய இந்தியாவின் முதல் மாநிலமாக கேரள மாநிலம் மாறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்