கேரளாவின் இடுக்கியைச் சேர்ந்த பழங்குடி மன்னர் இராமன் இராஜமன்னன் மற்றும் அவரது மனைவி பினுமோல் ஆகியோர் புது டெல்லியில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் கலந்து கொண்டனர்.
இடுக்கியில் உள்ள 48 பட்டியலிடப்பட்ட பழங்குடியின கிராமங்களில் சுமார் 300க்கும் மேற்பட்ட மன்னன் சமூகக் குடும்பங்கள் உள்ளன.
அவர்களின் சடங்குகளில் மன்னருக்கு ஒரு சிறப்பு இடம் உண்டு.
அரசக் குடும்பங்களிலிருந்து, பாரம்பரியத் தாய்வழி மரபுரிமை முறையின்படி அவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
அரசருக்குச் சமூகத்தில் எந்தக் குடிமை உரிமைகளும் கடமைகளும் இல்லை, ஆனால் நான்கு உப ராஜாக்கள் (பிரதிநிதிகள்), ஒரு இளையராஜா (இளவரசர்) மற்றும் கானிகள் என்று அழைக்கப்படும் 50 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு அமைச்சர்கள் குழுவின் உதவியுடன் சமூகத்தின் விவகாரங்களை அவர் மேற்பார்வையிடுகிறார்.