TNPSC Thervupettagam

கேரளாவின் சுற்றுச்சூழல் சார் நிதிநிலை அறிக்கை

February 15 , 2024 316 days 385 0
  • முதன்முறையாக, கேரள அரசு ஆனது சுற்றுச்சூழல் சார் நிதிநிலை அறிக்கையினை மாநில அரசின் நிதிநிலை அறிக்கையுடனான தனி ஆவணமாக அறிமுகப்படுத்தி உள்ளது.
  • இது நிதிநிலை அறிக்கை மற்றும் நிதிக் கொள்கைகளின் சுற்றுச்சூழல் தாக்கங்களை மதிப்பிட்டு, மாநிலத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்களில் சுற்றுச்சூழல் சார்ந்த கருத்துக்களை ஒருங்கிணைக்கிறது.
  • ஒன்பது துறைகளில் 81 திட்டங்களையும், சுற்றுச்சூழல் தொடர்பான பகுதிகளில் அவற்றின் நிதிநிலை அறிக்கை ஒதுக்கீடுகளையும் இந்த ஆவணம் எடுத்துரைக்கிறது.
  • முதல் சுற்றுச்சூழல் சார் நிதிநிலை அறிக்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகள் வேளாண்மை, கால்நடைகள், மீன்வளம், காடுகள் மற்றும் வனவிலங்குகள், சுற்றுச்சூழல், நீர் வளங்கள், கூட்டுறவு, மண் ஆய்வு மற்றும் எரிசக்தி துறை ஆகியன ஆகும்.
  • இந்தத் துறைகளுக்கான நிதிநிலை அறிக்கை ஒதுக்கீடுகளில் சுற்றுச்சூழல் தொடர்பான திட்டங்களுக்கான மொத்த ஒதுக்கீடு தோராயமாக 668.88 கோடி ரூபாய் (2024-25) ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்