சரக்கு மற்றும் சேவை வரி மன்றமானது (Goods and Services Tax Council – GST Council) கேரள வெள்ள சீரமைப்புப் பணிகளுக்கான பேரிடர் வரி கோரிக்கை மீது தீர்வுகள் அளிப்பதற்காக 7 நபர்கள் கொண்ட அமைச்சர் குழு ஒன்றை ஏற்படுத்த முடிவு செய்திருக்கின்றது.
இம்முடிவு புதுதில்லியில் நடைபெற்ற GST மன்றத்தின் 30வது கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
இந்தக் குழுவானது கேரளாவிடமிருந்து எழுந்த கோரிக்கையான பேரிடர் மீதான வரி பற்றி விவாதித்தது. இந்த விதியானது கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்திற்குப் பிறகு சீரமைப்புப் பணிகளுக்கான தொகையை நிவர்த்தி செய்வதற்காக கூடுதல் வருமானங்களை திரட்ட எண்ணும் ஒரு சிறப்பு வரி ஆகும்.