கேரளாவில் உள்ள அபூர்வ கீழை வல்கழுகு
December 2 , 2024
21 days
76
- பறவைக் கண்காணிப்பாளர் ஒருவர், கோலே பகுதியில் அறிவியல் ரீதியாக அக்விலா ஹெலியாகா என அழைக்கப்படும் அரிய கழுகு இனத்தினைக் கண்டுள்ளார்.
- கீழை வல்கழுகு ஆனது கடைசியாக 2003 ஆம் ஆண்டில் கண்ணூரில் தென்பட்டது.
- இது தென்கிழக்கு ஐரோப்பா, மற்றும் மேற்கு மற்றும் மத்திய ஆசியாவில் இனப் பெருக்கம் செய்கிறது.
- குளிர்காலத்தில், அவை வடகிழக்கு ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளுக்கு வலசை போகின்றன.
- IUCN அமைப்பானது அதன் செந்நிறப் பட்டியலில் கீழை வல்கழுகு பறவை இனத்தினை அழிந்து போகும் அபாயம் உள்ள ஓர் இனமாகப் பட்டியலிட்டுள்ளது.
Post Views:
76