கேரளாவில் புயல் எச்சரிக்கை மையம்
August 23 , 2018
2287 days
831
- கேரளாவின் தலைநகரமான திருவனந்தபுரத்தில் புயல் எச்சரிக்கை மையமொன்று அமைக்கப்படுமென்று மத்திய புவி அறிவியல் அமைச்சகம் அறிவித்துள்ளது.
- இது மேலும் கர்நாடகாவின் மங்களுருவில் C-கற்றை டாப்ளர் வானிலை ரேடார் ஒன்றை அமைக்கவும் முன்மொழிந்துள்ளது.
- இது தற்போதைய அதிக மழைப்பொழிவு மற்றும் எதிர்கால தீவிரமான வானிலை நடவடிக்கைகள் குறித்த அக்கறையின் பேரில் எடுக்கப்பட்ட முடிவாகும்.
- தற்போது இந்திய வானிலை மையமானது 6 புயல் எச்சரிக்கை மையங்களைக் கொண்டுள்ளது.
- கிழக்கு கடற்கரையில் சென்னை, விசாகப்பட்டினம், புவனேஸ்வர் மற்றும் கல்கத்தா ஆகிய 4 மையங்கள்
- மேற்கு கடற்கரையில் அகமதாபாத் மற்றும் மும்பை ஆகிய 2 மையங்கள்.
Post Views:
831