TNPSC Thervupettagam

கேரள பாரம்பரிய மீட்புத்திட்டம்

August 24 , 2018 2286 days 803 0
  • சர்வதேச நினைவுச் சின்னங்கள் மற்றும் தளங்கள் மன்றமானது (ICOMOS) கேரளாவின் வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் மிகுந்த கட்டிடங்களுக்கு ஏற்பட்ட சேதத்தினை மதிப்பிடுவதற்கு கேரள பாரம்பரிய  மீட்புத் திட்டத்தை தொடங்கியுள்ளது.
  • ICOMOS (International Council on Monuments and Sites) ஒரு உலகளாவிய நினைவுச் சின்ன பாதுகாப்பு அமைப்பாகும்.
  • கேரளாவில் வெள்ளத்தால் சேதமடைந்த கலாச்சார பாரம்பரியத்தை அவசரமாக மீட்டெடுப்பதற்கான தளத்தை அமைக்கும் முயற்சியை இது முன்னெடுக்கிறது.
  • மத்திய அரசானது இதை கடுமையான இயற்கைப் பேரிடராக அறிவித்துள்ளது.
  • ICOMOS ஆனது இந்த பேரிடருக்கு பிந்தைய பணிகளில் பணியாற்றுவதற்காக பாரம்பரிய சொத்துக்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு ஆய்வு மையத்தை (International Centre for the Study of the Preservation and Restoration of Cultural Property - ICCROM) அணுகி உள்ளது.
  • ICCROM ஆனது இத்தாலியின் ரோம்-ஐ அடிப்படையாகக் கொண்ட, உலகம் முழுவதிலுமான கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட சர்வதேச அரசாங்க அமைப்பு ஆகும்.
  • ICOMOS ஆனது பிரான்சின் பாரிஸ்-ஐ தலைமையிடமாகக் கொண்ட உலக நினைவுச் சின்னப் பாதுகாப்பு அமைப்பு (அரசு சாரா அமைப்பு) ஆகும்.
  • 1964 ஆம் ஆண்டு வெனிஸ் சாசனத்தின் விளைவாக வார்சாவில் (போலந்து) 1965ம் ஆண்டு இது நிறுவப்பட்டது.
  • மேலும் இது கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கவும் குறிப்பாக உலக பாரம்பரிய ஒப்பந்தத்தை அமல்படுத்திடவும் யுனெஸ்கோ அமைப்பிற்கான ஒரு ஆலோசனை அமைப்பு ஆகும்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்