ஈக்வடார் உலகின் மிகவும் மதிப்புமிக்கச் சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றைப் பாதுகாப்பதற்காக ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான டாலர்களை அடுத்து வரும் 20 ஆண்டுகளில் செலவிட உள்ளதாக உறுதி பூண்டுள்ளது.
கிரெடிட் சூயஸ் வங்கியானது,1.6 பில்லியன் (€1.45 பில்லியன்) டாலர் மதிப்புள்ள ஈக்வடார் பத்திரங்களை, சுவிஸ் வங்கிக்கு வெறும் 644 மில்லியன் டாலர் மதிப்பிலான செலவினத்தினை உண்டாக்கும் இயற்கைக்கான கடன் மாற்று முறையில் வாங்கச் செய்வதாக அறிவித்துள்ளது.
முதலீட்டாளர்கள் திருப்பிச் செலுத்தாததைக் கருத்தில் கொண்டு, பத்திரங்கள் அதன் உண்மை மதிப்பினை விட குறைவான மதிப்பில் வர்த்தகம் செய்யப்பட்டன.
ஈக்வடார் தற்போது கிரெடிட் சூயஸ் வங்கியிலிருந்து ஒரு புதிய கடன் மூலம் அதன் சொந்த கடனை மிகக் குறைவான விலையில் திரும்ப பெற்றுள்ளது.
அதற்கு ஈடாக, ஈக்வடார் அரசாங்கமானது 20 ஆண்டுகளுக்கு கேலபேகோஸ் தீவுகளில் ஆண்டுதோறும் சுமார் 18 மில்லியன் டாலரைச் செலவழிக்க உள்ளதாக உறுதியளித்து உள்ளது.
2030, 2035 மற்றும் 2040 ஆகிய ஆண்டுகளின் பத்திரங்களுக்கான வழங்கீட்டு விலையில் 53.25% முதல் 35.5% வரை கிரெடிட் சூயஸ் வங்கி செலுத்த உள்ளது.