TNPSC Thervupettagam

கேலபேகோஸ் வளங்காப்பிற்கான ஈக்வடார் ஒப்பந்தம்

May 17 , 2023 560 days 269 0
  • ஈக்வடார் உலகின் மிகவும் மதிப்புமிக்கச் சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றைப் பாதுகாப்பதற்காக ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான டாலர்களை அடுத்து வரும் 20 ஆண்டுகளில் செலவிட உள்ளதாக உறுதி பூண்டுள்ளது.
  • கிரெடிட் சூயஸ் வங்கியானது,1.6 பில்லியன் (€1.45 பில்லியன்) டாலர் மதிப்புள்ள ஈக்வடார் பத்திரங்களை, சுவிஸ் வங்கிக்கு வெறும் 644 மில்லியன் டாலர் மதிப்பிலான செலவினத்தினை உண்டாக்கும் இயற்கைக்கான கடன் மாற்று முறையில் வாங்கச் செய்வதாக அறிவித்துள்ளது.
  • முதலீட்டாளர்கள் திருப்பிச் செலுத்தாததைக் கருத்தில் கொண்டு, பத்திரங்கள் அதன் உண்மை மதிப்பினை விட குறைவான மதிப்பில் வர்த்தகம் செய்யப்பட்டன.
  • ஈக்வடார் தற்போது கிரெடிட் சூயஸ் வங்கியிலிருந்து ஒரு புதிய கடன் மூலம் அதன் சொந்த கடனை மிகக் குறைவான விலையில் திரும்ப பெற்றுள்ளது.
  • அதற்கு ஈடாக, ஈக்வடார் அரசாங்கமானது 20 ஆண்டுகளுக்கு கேலபேகோஸ் தீவுகளில் ஆண்டுதோறும் சுமார் 18 மில்லியன் டாலரைச் செலவழிக்க உள்ளதாக உறுதியளித்து உள்ளது.
  • 2030, 2035 மற்றும் 2040 ஆகிய ஆண்டுகளின் பத்திரங்களுக்கான வழங்கீட்டு விலையில் 53.25% முதல் 35.5% வரை கிரெடிட் சூயஸ் வங்கி செலுத்த உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்