நாடு முழுவதையும் உள்ளடக்கும் விதமாக “கேலோ இந்தியா திட்டத்தின்” வரம்பை விரிவுபடுத்த புதிய அரசு முடிவு செய்துள்ளதாக குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு அமர்வில் உரையாற்றிய போது இதனை அவர் அறிவித்தார்.
தற்போது இந்தத் திட்டத்தின் கீழ் 2500 திறமைமிக்க வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுப் பயிற்சி பெறுகின்றனர். கூடுதலாக ஒவ்வொரு ஆண்டும் 2500 வீரர்கள் இவ்வசதியினைப் பெறுவர்.
கேலோ இந்தியா விளையாட்டுகள்
இது இந்தியாவின் விளையாட்டுக் கலாச்சாரத்தை அடிமட்ட அளவிலிருந்துப் புதுப்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
வருடந்தோறும் நடைபெறும் இந்நிகழ்வின் முதல் பதிப்பானது டெல்லியிலும் (2018) இரண்டாம் பதிப்பு (2019) புனேவிலும் நடைபெற்றது.
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளிலிருந்து 1000 விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உதவித் தொகையாக வருடந்தோறும் 5 லட்சம் ரூபாய் அடுத்த 8 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.