நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவக்கூடிய 3,500 கிலோமீட்டர் தூர வரம்புள்ள அணுசக்தித் திறன் கொண்ட ஒரு ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது.
இந்தச் சோதனையானது ஆந்திராவின் விசாகப் பட்டினக் கடற்கரையில் இருந்து நடத்தப் பட்டது.
இந்தச் சோதனையின் மூலம், ஐஎன்எஸ் அரிஹந்த் என்ற நீர்மூழ்கி அணுசக்தி வகைக் கப்பல்களின் வகுப்பில் இந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சேர்ப்பதில் இந்தியா மேலும் ஒரு படி முன்னேறியுள்ளது.
இந்த ஏவுகணையானது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் உருவாக்கப் பட்டுள்ளது.
இது ஒரு டன்னுக்கு மேல் எடையுள்ள அணு ஆயுதத்தை கொண்டுச் செல்லும் திறன் கொண்டது.
அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மட்டுமே 3,500 கிலோமீட்டர் தூர வரம்பு கொண்ட நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைக் கொண்டு உள்ளன.
நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையானது காற்று, நிலம் மற்றும் கடல் ஆகிய மூன்றின் அணு ஆயுதத் தளங்களுக்கும் மிக முக்கியமானப் பகுதியாக விளங்குகின்றது. இது இந்தியாவின் திருப்பித் தாக்கும் போர்த் திறனின் முன்னோடியாக விளங்குகின்றது.