சர்வதேச தீர்வுகளுக்கான வங்கியானது, (Bank for International Settlements) பருவநிலை தொடர்பான நிதி அபாயங்களை மதிப்பிடுவதற்கான தரவுகளைச் சேகரிப்பதற்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஒரு புதிய தளத்தை உருவாக்கியுள்ளது.
கார்பன் உமிழ்வுகள், பசுமைப் பத்திர வெளியீடு மற்றும் தன்னார்வ நிகர-சுழி உமிழ்வு உறுதிப்பாடுகள் குறித்த நிறுவனத்தின் பல்வேறு வெளிப்பாடுகளை மதிப்பாய்வு செய்வதற்காக அதன் சோதனை முறையிலான கையா AI திட்டம் பயன்படுத்தப் பட்டது.
அதிகம் கோரப்படும் வெளிப்படைத்தன்மையை வழங்குவதற்காக வேண்டி, அதிகார வரம்புகளில் உள்ள வரையறைகள் மற்றும் தகவல் வெளிப்படுத்தல் கட்டமைப்பில் உள்ள வேறுபாடுகளை கையா AI தளத்தினால் எதிர்கொள்ள முடிந்தது.
மேலும், இது பருவநிலை தொடர்பான நிதி அபாயங்களின் பல்வேறு குறிகாட்டிகளை ஒப்பிடுவதை எளிதாக்குகிறது.