அண்மையில் வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் மகாராஷ்டிராவில் உள்ள பன்சாத் வனவிலங்குச் சரணாலயத்தில் ஒரு இந்தியக் காட்டெருமை இருப்பதை முதன்முறையாக உறுதி செய்துள்ளனர்.
காட்டெருமைகள் உலகின் மிகப்பெரிய மற்றும் மிக உயரமான வனங்களில் வாழும் காட்டெருமை இனங்களாகும்.
இது வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம், 1972ன் கீழ் அட்டவணை Iல் பட்டியலிடப் பட்டுள்ளது.
இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு மன்றத்தின் சிவப்பு நிறப் பட்டியலில் “பாதிக்கப்படக் கூடிய” இனமாக வகைப்படுத்தப் பட்டுள்ளது.