TNPSC Thervupettagam

கொங்கு சோழர் காலத்து நடுகற்கள் – அன்னூர்

April 22 , 2022 952 days 532 0
  • திருப்பூரைச் சேர்ந்த சில தொல்லியல் ஆர்வலர்கள் சமீபத்தில் மூன்று நடுகற்களைக் கண்டறிந்துள்ளனர்.
  • இவை  கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னூரில் 11 அல்லது 12 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த கொங்கு சோழர்களின் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
  • வீர ராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தின் இயக்குநர் S.ரவிக் குமார் தலைமையிலான ஒரு குழுவினர், 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அன்னூரில் உள்ள மன்னீஸ்வரர் கோயிலுக்கு அருகில் உள்ள இந்த நடுகற்களைக் கண்டுபிடித்தனர்.
  • இந்த மூன்று நடுகற்களுள் ஒன்று ‘தலைபலி சிற்பம்’ ஆகும்.
  • இரண்டாவது கல்லானது, இடது கையில் ஒரு வில்லுடனும் வலது கையில் அம்புடனும் இருக்கும் ஒரு வீரரின் உருவத்தைச் சித்தரிக்கிறது.
  • மூன்றாவது நடுகல்லில், ஒரு வீரன் ஓர் எதிரியை வாளினால் தாக்குவதையும், அவன் இடது கையில் ஒரு வில்லைப் பிடித்திருப்பதையும் சித்தரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்