வடக்கு இரயில்வேயின் டெல்லி கோட்டம் கொசு ஒழிப்பு சிறப்பு இரயில் வண்டியை ஆரம்பித்திருக்கின்றது. இது இரயில் பாதைகளில் ஏற்படும் கொசுவின் இனப்பெருக்கத்தை தடுப்பதற்கு உதவிடும்.
சக்கரங்களின் மீதான கொசு ஒழிப்பான் என்ற இந்த வண்டி இரண்டு நாட்கள் கால கட்டத்தில் ஒரு சுழற்சியில் 150 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்கும்.
தெற்கு தில்லி மாநகராட்சியானது இரயில்வே பாதைகளில் உள்ள வளைகளில் ஏற்படும் கொசுவின் இனப்பெருக்கத்தை தணித்துக் கட்டுப்படுத்துவதற்காக ஒரு அதிசக்தி பூச்சிக் கொல்லியையும் தெளிப்பானையும் இரயில் வண்டியில் ஏற்படுத்தியிருக்கின்றது.