உலக போலியோ தினத்தில் (அக்டோபர் 24) உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொடிய போலியோ வைரஸ் வகை 3 (Wild Polio Virus - WPV3) உலகளவில் ஒழிக்கப் பட்டுள்ளதாக நிபுணர்களின் சுயாதீன ஆணையம் ஒன்று அறிவித்தது.
பெரியம்மை மற்றும் கொடிய போலியோ வைரஸ் வகை 2 ஆகியவற்றை ஒழித்ததைத் தொடர்ந்து இது நிகழ்ந்துள்ளது.
இதன் மூலம், 3 கொடிய போலியோ வைரஸ் விகாரங்களில் 2 வகைகள் அழிக்கப் பட்டுள்ளன.
கொடிய போலியோ வைரஸ் வகை 1 என்ற வகையை அகற்ற முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
இந்த வைரஸ் ஆனது இன்னமும் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளில் புழக்கத்தில் இருந்து வருகின்றது.
தனிப்பட்ட மற்றும் நோயெதிர்ப்பு ரீதியாக மூன்று வேறுபட்ட கொடிய போலியோ வைரஸ் விகாரங்கள் தற்போது உள்ளன