TNPSC Thervupettagam

கொடுமணல் அகழாய்வு

June 22 , 2020 1675 days 1084 0
  • சமீபத்தில் சென்னையில் உள்ள தமிழ்நாடு தொல்லியல் துறையானது தமிழ்நாட்டில் உள்ள கொடுமணல் அகழாய்வுத் தளத்தில் 250 வட்டவடிவ நில அடையாளக் கற்குவைகளை அடையாளம் கண்டுள்ளது.
  • இந்தத் தளத்திலிருந்து 10 பானைகள் மற்றும் கிண்ணங்கள் ஆகியவை கண்டெடுக்கப் படுவது இதுவே முதல்முறையாகும்.
  • மேலும் இந்தத் தளத்திலிருந்து விலங்கு மண்டை ஓடு, மணிகள், செப்பு உருக்கு அலகுகள், பட்டறைகளின் ஈர மண் சுவர்கள், மட்பாண்டங்கள் மற்றும் தமிழ் பிராமி எழுத்து வடிவம் ஆகியவையும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • இது பெருங்கற்காலக் கலாச்சாரத்தில் வாழ்விற்குப் பிறகான நிலை (இறப்பு) மற்றும் அடக்கம் செய்யப் படுவதற்கான சடங்குகள் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தி உள்ளது.
  • பெருங்கல் என்பது தனியாக ஒரு கல் அல்லது பல்வேறு கற்களுடன் சேர்த்து ஒரு அமைப்பு அல்லது நினைவுச் சின்னத்தைக் கட்டமைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு மிகப்பெரிய வரலாற்றுக்கு முந்தைய காலக்கட்டத்தைச் சேர்ந்த கல்லாகும்.
  • கொடுமணல் என்பது தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும்.
  • இது காவிரி ஆற்றின் துணையாறான நொய்யல் ஆற்றின் வடக்கு நதிக்கரையில் அமைந்துள்ளது.
  • இது ஒரு காலத்தில் கொடுமணம் என்ற பெயரில் வளர்ந்து வரும் ஒரு பண்டைய வர்த்தக நகரமாக குறிப்பிடப் பட்டுள்ளது. இது சங்க இலக்கியமான பதிற்றுப்பத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.
  • இது கி.மு. 5 ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. 1 ஆம் நூற்றாண்டு வரை வர்த்தக மற்றும் தொழில்வள நகரமாகச் செயல்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்