TNPSC Thervupettagam

கொடும்பாளூரில் அகழாய்வு

January 6 , 2025 7 days 104 0
  • புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுக்காவில் உள்ள கொடும்பாளூரில் உள்ள குடியிருப்புகள் அமைந்துள்ள மேட்டுப் பகுதிகளில் இந்தியத் தொல்லியல் துறையின் திருச்சி வட்டப் பிரிவானது அகழாய்வு மேற்கொண்டுள்ளது.
  • திருச்சியில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ள கொடும்பாளூரில் இந்தியத் தொல்லியல் துறையினால் பரமரிக்கப்படும் பல நினைவுச் சின்னங்கள் உள்ளன.
  • சுந்தர சோழன் (கி. பி. 956-973) என அழைக்கப் படும் இரண்டாம் பராந்தகனின் ஒரு அரசியல் கூட்டாளியாக இருந்ததாக நம்பப் படும் இருக்கவேல் தலைவரான பூதி விக்ரம கேசரி அவர்களால் கட்டப்பட்ட மூவர் கோயிலும் இதில் அடங்கும்.
  • சங்க இலக்கியமான சிலப்பதிகாரத்தில் கொடும்பாளூர் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இந்தியத் தொல்லியல் துறையின் 2035 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட உள்ள அகழ்வாராய்ச்சிக்கான தொலைநோக்கு அறிக்கையின் (Looking Beyond) கீழ் திருச்சி வட்டத்தில் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக அடையாளம் கண்டுள்ள 32 தளங்களில் இதுவும் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்