மாநிலத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறையினை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக நிலையான இயக்க நடைமுறைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொழிலாளர்கள் துறையின் முன்மொழிவு ஆகும்
தமிழ்நாடானது நாட்டில் ஐந்தாவது அதிக ஆட்கடத்தல் வழக்குகளைப் பதிவு செய்துள்ள மாநிலம் ஆகும்.
கொத்தடிமை தொழிலாளர் முறை (ஒழிப்பு) சட்டம் மற்றும் 2016 ஆம் ஆண்டின் கொத்தடிமை தொழிலாளர்கள் மறுவாழ்விற்கான மத்திய அரசின் திட்டம் ஆகியவற்றின் அமலாக்க நிறுவனங்களுக்கு வழிகாட்டும் வகையில் அவர்களை அடையாளம் காண்பது, மீட்பது மற்றும் மறுவாழ்வு அளிப்பது ஆகியவற்றில் ஒரே மாதிரியான நடைமுறையை அரசு கொண்டு வந்துள்ளது.