சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அகழாய்வுத் தளத்தின் ஒரு பகுதியான கொந்தகை அகழ்வாராய்ச்சி தளம் ஆனது, நிலத்தடி நீர் ஊற்றெடுத்ததால் தண்ணீரில் மூழ்கியது.
இந்த தளம் ஆனது கீழடி தளத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
இரண்டு முதுமக்கள் தாழிகள் 2022 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டன.
அவற்றில் ஒன்றில் இறந்தவர்களுடன் சேர்த்து புதைக்கப்பட்ட சிறிய குழியம் கொண்ட கிண்ணங்கள், சிறிய பானைகள் மற்றும் ஒரு வளைய வடிவ நிலை தாங்கி உட்பட 20 பாத்திரங்கள் இருந்தன.
2022 ஆம் ஆண்டில் அந்த இடத்தில் 40 சென்டிமீட்டர் அளவுள்ள இரும்பு வாள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் அது 'கல்லறைப் பொருட்களின்' ஒரு பகுதியாக இருப்பதாக நம்பப் படுகிறது.