TNPSC Thervupettagam

கொரகா பழங்குடியினரின் மக்கள் தொகை

February 1 , 2025 22 days 71 0
  • பிறப்பு விகிதம் மிகவும் குறைந்து பச்சிளம் குழந்தை உயிரிழப்பு விகிதம் அதிகரித்து வருவதால், கொரகா பழங்குடியினரின் மக்கள் தொகை மிக வெகுவாகக் குறைந்து வருகிறது.
  • சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு, கொரகர்களின் எண்ணிக்கையானது 20,000 ஆக இருந்தது, ஆனால் தற்போது இது 16,000 ஆகக் குறைந்துள்ளது.
  • கொரகா பழங்குடியினர் எளிதில் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினக் குழுவாக (PVTG) வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
  • அவர்கள் முதன்மையாக தட்சிண கர்நாடக மாவட்டத்திலும் உடுப்பி மாவட்டத்திலும் வசிக்கின்றனர்.
  • முன்னதாக, கேரள மாநில அரசு இப்பழங்குடியினர் வீடுகளுக்குச் சத்தான உணவை வழங்குவதற்கான திட்டங்களைத் தொடங்கியுள்ளது.
  • இந்துக்களாக அடையாளப் படுத்தப்பட்டுள்ள கொரகர்கள் தனித்துவமானப் பழங்குடி மத வழிபாட்டு முறைகளைப் பின்பற்றுகிறார்கள்.
  • பூதங்கள் எனப்படும் ஆன்மாக்களை வணங்கும் அவர்கள் மந்திரம் & சடங்குகளின் சக்தியை நம்புகிறார்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்