பிறப்பு விகிதம் மிகவும் குறைந்து பச்சிளம் குழந்தை உயிரிழப்பு விகிதம் அதிகரித்து வருவதால், கொரகா பழங்குடியினரின் மக்கள் தொகை மிக வெகுவாகக் குறைந்து வருகிறது.
சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு, கொரகர்களின் எண்ணிக்கையானது 20,000 ஆக இருந்தது, ஆனால் தற்போது இது 16,000 ஆகக் குறைந்துள்ளது.
கொரகா பழங்குடியினர் எளிதில் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினக் குழுவாக (PVTG) வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்கள் முதன்மையாக தட்சிண கர்நாடக மாவட்டத்திலும் உடுப்பி மாவட்டத்திலும் வசிக்கின்றனர்.
முன்னதாக, கேரள மாநில அரசு இப்பழங்குடியினர் வீடுகளுக்குச் சத்தான உணவை வழங்குவதற்கான திட்டங்களைத் தொடங்கியுள்ளது.
இந்துக்களாக அடையாளப் படுத்தப்பட்டுள்ள கொரகர்கள் தனித்துவமானப் பழங்குடி மத வழிபாட்டு முறைகளைப் பின்பற்றுகிறார்கள்.
பூதங்கள் எனப்படும் ஆன்மாக்களை வணங்கும் அவர்கள் மந்திரம் & சடங்குகளின் சக்தியை நம்புகிறார்கள்.