TNPSC Thervupettagam

கொரகா பழங்குடியினர் - ஸ்மைல் நடவடிக்கை திட்டம்

December 3 , 2024 19 days 162 0
  • காசர்கோடு மற்றும் மஞ்சேஸ்வரம் ஆகிய தாலுக்காக்களில் உள்ள பட்டியலிடப்பட்டப் பழங்குடியினர் (ST) பிரிவான கொரகா என்ற சமூகத்தினருக்கு நிலப் பட்டா (பட்டா) வழங்குவதற்கான நடவடிக்கைகளை கேரளா தொடங்கியுள்ளது.
  • இந்த முன்னெடுப்பானது ஸ்மைல் நடவடிக்கை என்ற திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப் படுகிறது.
  • இந்த நடவடிக்கைக்கு, பழங்குடியினர் மேம்பாட்டுத் துறையின் தொகுப்பு நிதிப் பயன் படுத்தப் படுகிறது.
  • இந்த மாவட்டத்தில் உள்ள கொரகா சமூகத்தின் மக்கள் தொகை 539 குடும்பங்களில் மொத்தமாக 1,706 பேர் ஆகும்.
  • ஸ்மைல் நடவடிக்கையானது கிராமப் பஞ்சாயத்து அமைப்பு, பழங்குடியினர்  நிர்வாக விரிவாக்க அமைப்புகள் மற்றும் கிராம அலுவலகங்களில் இருந்து மதிப்பீட்டாளர்கள் மற்றும் அதிகாரிகள், அத்துடன் அந்தச் சமூகத்தினைச் சேர்ந்த முதியவர்கள் மற்றும் ஊக்குவிப்பாளர்களை உள்ளடக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்