இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையமானது 30 பொது மற்றும் சுகாதாரக் காப்பீட்டு நிறுவனங்களுக்கு இதனைக் கட்டாயமாக்கியுள்ளது.
இது கொரானா வைரஸ் நோய்க்காக குறுகிய கால நிலையான சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்களைத் தொடங்க இருக்கின்றது.
இந்த 2 கூறுகளின் கீழ் உள்ள காப்பீடானது அகில இந்திய அளவில் செயல்படுவதாகும். புவியியல் இருப்பிட அடிப்படையிலான தொகைக்கோ அல்லது மண்டல அடிப்படையிலான தொகைக்கோ இதில் அனுமதி அளிக்கப் படாது.