மேற்கு வங்கத்தின் கல்யாணியில் உள்ள தேசிய உயிரி மருத்துவ மரபியல் நிறுவனமானது 10 பல்வேறு வகையான மாற்றம் பெற்ற கொரானா வைரஸ் உள்ளது என்று ஒரு ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது.
இவற்றில், A2a ஆனது அனைத்துப் புவியியல் பகுதிகளிலும் ஆதிக்கம் செலுத்தும் தன்மை கொண்டதாக உள்ளது.
A2a வைரஸ் மாற்றமானது அதிக எண்ணிக்கையில் மனித நுரையீரலில் நுழையும் அதிகத் திறன் கொண்டதாக உள்ளது.
இந்த வைரசானது O, A2, A2a, A3, B, B1 மற்றும் அதன் பல்வேறு இதர வடிவங்களாக வகைப்படுத்தப் பட்டுள்ளது.
தற்பொழுது O வகை உள்ளிட்ட 11 வைரஸ் வகைகள் அடையாளம் காணப் பட்டுள்ளன.
இது வூகானில் உருவான வைரசின் மரபு வழி வந்த வகையைச் சார்ந்ததாகும்.