செவ்வாய் கிரகத்தின் மீதான ஒரு பனி படர்ந்த பள்ளம் கொரோலெவ் பள்ளமாகும்.
ஐரோப்பிய விண்வெளி கழகத்தின் மார்ஸ் எக்ஸ்பிரஸ் திட்டத்தினால் செவ்வாயில் உள்ள பனியால் சூழப்பட்ட கொரோலேவ் எரிமலைப் பள்ளத்தின் படம் பிடிக்கப்பட்டது.
இந்த பள்ளத்தின் தரை தளமானது அதன் விளிம்பிலிருந்து 2 கி.மீ (1.2 மைல்) அளவு ஆழத்தில் அமைந்துள்ளது. இது பூமியின் மாபெரும் பள்ளத்தாக்கின் (Grand Canyon) ஆழத்தை விட அதிகமாகும்.
மார்ஸ் எக்ஸ்பிரஸ் திட்டம் ஆனது 2013 ஜுன் மாதம் தொடங்கப்பட்டு அதே ஆண்டின் டிசம்பர் மாதத்தில் செவ்வாயின் சுற்றுப்பாதையில் நுழைந்தது.
அன்றிலிருந்து செவ்வாயின் மேற்பரப்பை உயர் தெளிவுள்ள புகைப்படக்கருவி மற்றும் ரேடார், எஸ்பெக்ட்ரோ மீட்டர் உள்ளிட்ட மற்ற கருவிகளைப் பயன்படுத்தி இந்த ஆய்வு கணக்கெடுப்பு மேற்கொண்டு வருகிறது.