TNPSC Thervupettagam

கொலம்பியாவின் சிரிபிகியூட் பூங்கா- உலக பாரம்பரிய இடம்

July 8 , 2018 2236 days 618 0
  • ஐக்கிய நாடுகள், கொலம்பியாவின் சிரிபிகியூட் தேசிய பூங்காவினை தனது உலக பாரம்பரிய இடங்களின் பட்டியலில் சேர்த்துள்ளது.
  • காகுய்ட்டா மற்றும் குவாவியர் ஆகிய தெற்கு மாகாணங்களில் அகண்டு காணப்படும்  இந்த பூங்காவானது, நாட்டின் பெரியதும் வடக்கு அமேசானில் மிகப்பெரிய அளவிலான தாவரப் பன்முகத் தன்மையைக் கொண்டதுமான பூங்காக்களுள் ஒன்றாகும்.
  • காடுகளிலிருந்து வெளியே உயரும் டெபூய்ஸ் என்ற மேசை மேற்பரப்பு போன்ற பாறை அமைப்பிற்கும் இந்த பூங்கா பிரபலமானதாகும்.
  • கொலம்பியாவில் உலகப் பாரம்பரிய தளம் என்ற தகுதி கொடுக்கப்பட்ட 9வது இடம் இதுவாகும்.
  • சிரிபிகியூட் 1989-ல் முதன்முதலில் தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டது. இது உலகின் பழமையான பாறை அமைப்புகளின் ஒன்றின் மேல் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்