TNPSC Thervupettagam

கொலிஜியம் முறையை மேம்படுத்த நடவடிக்கைகள்

March 30 , 2018 2305 days 1140 0
  • உச்ச நீதிமன்றம் தனது ஒரு தீர்ப்பில் நீதிபதிகளை நியமிக்கும் முறையான கொலிஜியத்தை மேம்படுத்திட தனிச் செயலகம் அமைப்பது உள்பட விரைவான முடிவுகள் எடுக்கப்பட வேண்டுமென்று சுட்டிக் காட்டியுள்ளது.
  • மேலும் பதவியிலிருக்கும் நீதிபதிகள் - பதவிக்கு வந்தபின் நெறி தவழ்வது அல்லது போதிய திறமையின்மையைக் கொண்டிருப்பது அல்லது நேர்மையான நடத்தையை கடைபிடிக்கத்  தவறுவது போன்ற விஷயங்களை சரி செய்யும் நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன எனக் கூறியுள்ளது.
  • டிசம்பர், 2015ம் ஆண்டு தேசிய நீதிபதிகள் நியமன ஆணைத்திற்கான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு கொலிஜீயம் முறையில் செயல்படுத்த வேண்டுமென்று தெரிவித்த கருத்துக்கள் இன்றளவும் நடைமுறைப் படுத்தப்படாமல் உள்ளதாக நீதிபதிகள்K.கோயல் மற்றும் ரோஹின்டன் F.நாரிமன் அடங்கிய அமர்வு கூறியுள்ளது.
  • மத்திய அரசு, தேசிய நீதிபதிகள் நியமன அமர்வு பரிந்துரைத்த முன்னேற்ற நடவடிக்கைகள் உள்ளடங்கியிருக்கும் புதிய நடைமுறையை ஏற்படுத்த உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது.
  • உச்ச நீதிமன்றம், தற்போது தனித்த நீதித்துறையோடு ஒத்துப்போகும் வகையில் முழு உறுப்பினர் அமைப்பு (full-time body) ஒன்று கொலிஜீயம் முறைக்கு முக்கியத் தேவையாக உள்ளது என வலியுறுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்