இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கிடையே எல்லை தாண்டிச் செல்லும் இரயில் சேவையான கொல்கத்தாவிலிருந்து குல்னா வரை செல்லும் பந்தன் எக்ஸ்பிரசை இந்தியப் பிரதமர், வங்கதேசப் பிரதமர் மற்றும் மேற்கு வங்க முதல்வர் கொல்கத்தா இரயில் நிலையத்திலிருந்து காணொளிக் காட்சி மூலம் துவக்கி வைத்தனர்.
கொல்கத்தாவையும் டாக்காவையும் இணைக்கும் மைத்ரி எக்ஸ்பிரஸ் இரயிலுக்கு அடுத்தபடியாக இந்தியா – வங்கதேசத்திற்கிடையே உள்ள இரண்டாவது இரயில் சேவை இதுவாகும்.
மேலும் அவர்கள்
வங்கதேசத்தில் முறையே மேக்னா மற்றும் திதாஸ் நதிகள் மீது டாக்கா சிட்டகாங் வழித்தடத்தில் செல்லும் இரண்டாவது பைரப் மற்றும் திதாஸ் இரயில்வே பாலத்தையும்
கொல்கத்தா இரயில் நிலையத்தில் சுங்க அனுமதி வசதியும், குடியேற்ற வசதியும் கொண்ட இரயில்வே பயணிகள் முனையத்தையும் துவக்கி வைத்தனர்.