TNPSC Thervupettagam

கொள்முதல் மற்றும் சேவைகளுக்கிடையேயான (குறுக்கு சேவை) ஒப்பந்தம்

September 17 , 2020 1440 days 589 0
  • இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இரு நாடுகளின் ஆயுதப் படைகளும் சேவைகள் மற்றும் விநியோகத்தில் மிக நெருக்கமாக ஒத்துழைக்கும் வகையில் செயல்படுவதற்காக ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
  • இந்தச் சேவைகள் மற்றும் விநியோகங்கள் ஆனது உணவு, நீர், போக்குவரத்து, விமானத்தில் சரக்கேற்றல், பெட்ரோலியம், உடை, தகவல் தொடர்பு மற்றும் மருத்துவச் சேவைகள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
  • இந்த ஒப்பந்தமானது விநியோகங்கள் மற்றும் சேவைகள் ஒப்பந்தத்தின் பரஸ்பர அம்சம் மற்றும் கொள்முதல் மற்றும் சேவைகளுக்கிடையேயான ஒப்பந்தம் எனப் படுகின்றது.
  • இது 10 ஆண்டு காலத்திற்கு நடைமுறையில் இருக்கும். இந்த இரண்டு நாடுகள் இதை முடிவுக்குக் கொண்டு வந்தால் தவிர, அடுத்த பத்து ஆண்டுக் காலத்திற்கு இது நீட்டிக்கப் படும்.
  • இந்தியா இதே போன்ற ஒப்பந்தங்களை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்சு, ஓமன் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடன் கொண்டுள்ளது.
  • இது சிறந்த கடல்சார் ஒத்துழைப்பை அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் இது பரஸ்பரப் பயன்களுக்கான கடல்சார் வசதிகளைப் பகிர்ந்து கொள்வதற்காக வேண்டி இந்த 2 நாடுகளும் இந்தியா-ஜப்பான் கடற்பயிற்சியை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்