2003 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து முதல் முறையாக இந்திய நாடானது கொழும்பு செயல்முறை மன்றம் எனப்படும் பிராந்தியக் குழுமத்தின் தலைவராக மாறியுள்ளது.
கொழும்பு செயல்முறை மன்றம் என்பது ஆசியாவின் 12 உறுப்பினர் நாடுகளை உள்ளடக்கிய ஒரு பிராந்திய ஆலோசனை வழங்கீட்டு மன்றமாகும்.
கொழும்பு செயல்முறை என்பது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பூர்வீக நாடுகளின் பிராந்திய ஆலோசனை செயல் முறை ஆகும்.
இது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பற்றிய மிகச் சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக் கொள்வதற்கான ஒரு மன்றமாகச் செயல்படுகிறது.